பாடல் #2524
தாரகமே பசிதாகத்துடன்
🔤 Thaarakamae Pasithaagatthudan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாரகமே, - பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாறேன். சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். - தார 1.பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர்; - பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர்; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள - தார 2.காணாதொழிந்த ஆடு வீணாய்ப்போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்; - அது பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப் பேருல குதித்தேனென்றீர்; வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன் மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். - தார 3.தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம் தகமை எத்தனமாமே; - யான் சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத் தேவசுத்தாவி தாமே; உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான் சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! - தார
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaarakamae, - Pasithaagatthudan Ummidam Vaegatthudanae Vaaraen. Seerunj Selvamum Perruth Thaerumbatik Kennidam Saerum Yaaraiyum Orupothun Thallitae Nenreer. - Thaara 1.paavamakalath Thaeva Kobamathu Ozhiyap Paatubattuyir Vituttheer; - Pinnum Jeeva Posana Menakkeeya Umaiyae Andhach Siluvaidhanilae Pakuttheer; Maeviyenai Nerukkith Thaavum Pavatthaik Konru, Saevith Thuyirpizhaikka, Thaevae, Umaiyut Kolla - Thaara 2.kaanaathozhindha Aatu Veenaayppokaamal Athai Kantupititthi Ratsittheer; - Athu Paenudhaludan Pari Poorana Matainthidap Paerula Kuthitthaenenreer; Vaenumumathu Neethi Poona, Niraivaa Yundran Maanarulun Thirupthiyaanae Pera Ummidam. - Thaara 3.thandha Thiruvasanam Undham Iraapposanam Thakamai Etthanamaamae; - Yaan Sinthai Panindhavarrai Endran Manathutkollath Thaevasutthaavi Thaamae; Undham Thasaiyuthira Vinthai Virunthinai Yaan Sandhathamuntu Thuthi Saartra Arul Seyveerae! - Thaara