பாடல் #2510
தாகம் மிகுந்தவரே
🔤 Thaagam Mikundhavarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகம் மிகுந்தவரே, அமர்ந்த தண்ணீரண்டை வாரும் - ஒ! 1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே, - நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம், வேண்டியதைத் தருவேன். - ஓ! 2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே, - விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே. - ஓ! 3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே, - வாரும், நேரே, உமக்கிளைப் பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன். - ஓ! 4.அப்பமல்லாத எதனையும் திருப்தி அளித்திடாப் பொருளையும், - நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம் தன்னையுமேன் கெடுப்பீர்? - ஓ! 5.கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில் கண்டிடுமே உடனே; - உந்தன் அத்தன் சமீபமாக இருக்கும் போதே ஆவலாய்க் கூப்பிடுமே. - ஓ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagam Mikundhavarae, Amarndha Thanneerantai Vaarum - O! 1.aegan Naanunggalaiyae Azhaikkum Enthan Inbavaakkutthatthamae, - Nampi Vaegamaaga Oti Vaarumenathidam, Vaentiyathaith Tharuvaen. - O! 2.kaasubanamathu Arrulakandhannil Kashtappatuvorae, - Visu Vaasamaay Ennidam Vanthu Vilaiyinri Vaangkiyae Saappitumae. - O! 3.paarachsumaiyotu Paaril Varutthanggal Pattu Uzhalvorae, - Vaarum, Naerae, Umakkilaip Paarudhalaaviyai Naesamaayth Thanthituvaen. - O! 4.appamallaadha Edhanaiyum Thirupthi Alitthitaap Porulaiyum, - Nampith Thappidhamaayp Pirayaasatthaiyum Panam Thannaiyumaen Ketuppeer? - O! 5.karttharaik Kandataiyatthakka Kaalatthil Kantitumae Udanae; - Undhan Atthan Sameebamaaga Irukkum Pothae Aavalaayk Kooppitumae. - O!