பாடல் #2505
தருணம் பரம
🔤 Tharunam Parama
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணமே, பரம சரீரி; எனைத் தாங்கி அருள், கருணைவாரி. உரிமை அடியர் அனுசாரி, - உயர் எருசலை நகர் அதி காரி, அதி - தரு 1.வரர் அடி தொழும் வெகு மானி, - பரன் - மகிமை ஒளிர் தேவ சமானி, நரர் பிணை ஒரு பிரதானி, - யேசு - நாயகன் என தெஜமானி அதி, - தரு 2.ஆதாரம் உனை அன்றி யாரோ? - எனை - அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே; பாதாரவிந்தம் கதி சேரே, - இஸ்ரேல் - பார்த்திபன் தவிது வங்கிஷ வேரே, அதி - தரு 3.நித்த நித்த மாக என்றன் மேலே - வருவ - தெத்தனை துன் பங்கள் ஒருக்காலே; அத்தனையும் நீங்குதற்குன் காலே - எனக் - குத்தம துணைதான், மனு வேலே, அதி - தரு 4.கங்குல் பகலும் துயரம், கோவே; - வரும் - கலக்கம் ஒழித் தெனைத் தற் காவே! பங் கெனக்குத் தந்த மெய்ம் மன்னாவே, - ஏழைப் - பாவியை ரட்சியும், ஏசு தேவே! அதி - தரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunamae, Parama Sareeri; Enaith Thaangki Arul, Karunaivaari. Urimai Atiyar Anusaari, - Uyar Erusalai Nakar Athi Kaari, Athi - Tharu 1.varar Ati Thozhum Veku Maani, - Paran - Makimai Olir Thaeva Samaani, Narar Pinai Oru Pirathaani, - Yaesu - Naayakan Ena Thejamaani Athi, - Tharu 2.aathaaram Unai Anri Yaaro? - Enai - Anpaayth Thirukkan Kontu Paarae; Paathaaravindham Kathi Saerae, - Israel - Paartthiban Thavithu Vangkisha Vaerae, Athi - Tharu 3.nittha Nittha Maaga Endran Maelae - Varuva - Thetthanai Thun Panggal Orukkaalae; Atthanaiyum Neengkudharkun Kaalae - Enak - Kutthama Thunaithaan, Manu Vaelae, Athi - Tharu 4.kangkul Pakalum Thuyaram, Kovae; - Varum - Kalakkam Ozhith Thenaith Thar Kaavae! Pang Kenakkuth Thandha Meym Mannaavae, - Aezhaip - Paaviyai Ratsiyum, Aesu Thaevae! Athi - Tharu