பாடல் #2502
தருணம் இதில்
🔤 Tharunam Ithil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணம் இதில் யேசுபரனே! - உமதாவி தரவேணுமே சுவாமீ! அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. - தருணம் 1.விந்தை, ஞானம், அறிவு வேத சத்தியங்களில் மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச் சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும் சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. - தருணம் 2.பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப் பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச் சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும் மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. - தருணம் 3.ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து, மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. - தருணம் 4.ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட, வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. - தருணம் 5.மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத் தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. - தருணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunam Ithil Yaesubaranae! - Umathaavi Tharavaenumae Suvaamee! Arultharum Sathya Valla, Anpin Jebatthin Aavi Apishaegam Perumundran Atiyarmael Amarnthida. - Tharunam 1.vinthai, Njaanam, Arivu Vaedha Satthiyanggalil Mikka Uyarnthu Thaernthu Vinnoli Ivar Veesach Sathyam Sakalath Thullum Thaasarkalai Natatthum Sathya Aavi Ivarmael Sampooranamaayp Peyya. - Tharunam 2.paavatthai Vaerarukkum Aaviyin Vaalpititthup Palamaagavae Ivar Ulakinil Por Seyyach Saavurrorkalai Nithya Jeevanaip Perach Seyyum Maa Veeraraay Vilangga Vallaaviyae Irangga. - Tharunam 3.aaviyin Kaniyennum Anpaathi Kunanggalai Anuthinamum Ivar Anigala Maayaninthu, Maevum Thirumanthaiyai Maeytthu Valarkka Nalla Maeypparae, Anpin Aavi Vaayppaay Ivaril Thangga. - Tharunam 4.aekkam Aatthuma Thaagam Itaivitaamal Atainthu Ookkatthudanae Ivar Oyaamal Jepitthida, Vaakkuk Katangkaap Perumoochsotae Emakkaaga Manraatum Jeba Aavi Enrenrum Nirampida. - Tharunam 5.maasugalara Ummil Vaasamaaga Nilaitthu Maabanivaay Undham Makimaiyai Nidham Thaedath Thaesuru Arulnaathaa, Thaasar Ullatthininru Jeevanathigal Otich Selvam Pozhiyach Seyya. - Tharunam