பாடல் #2490
தந்தை தன் சிறு மைந்தனை
🔤 Thanthai Than Siru Maindhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2. அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3. மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4. அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5. தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார் பெற்றோரின் அன்பினால். 6. அவ்வாறே திருப்பாதத்தில் ஆனந்தம் அடைந்தேன்; மென்மேலும் அருள் நாதரே பேரன்பை ருசிப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thanthai Than Siru Paalanai Kaiyaenthi Thaangkuvaan; Seeraattap Pertra Paalakan Apaayam Ninaiyaan. 2. Avvaarae Ennai, Thanthaiyae, Kaappaarrith Thaangkuveer; En Palaveenam Neenggavum Kaiyaenthi Varuveer. 3. Maathaavin Naesa Matiyil Saaynthaatum Kuzhanthai Thaayaarin Mugam Paarkkaiyil Marakkum Kilaesatthai. 4. Avvaarae, Naesa Rasashakaa Um Arul Mugatthai Naan Paarkka, Sthiramaakkuveer En Visuvaasatthai. 5. Thaay Thanthaip Pakkam Paalarai Utkaara Vaikkungkaal, Santhoshitthullam Kalippaar Perrorin Anpinaal. 6. Avvaarae Thiruppaadhatthil Aanandham Atainthaen; Menmaelum Arul Naadharae Paeranpai Rusippaen.