பாடல் #2487
தந்தேன் என்னை
🔤 Thanthaen Ennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தேன் என்னை இயேசுவே, இந்த நேரமே உமக்கே. உந்தனுக்கே ஊழியஞ்செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும்; 1.ஜீவகாலம் முழுதும் தேவபணி செய்திடுவேன், பூவில் கடும் போர் புரிகையில் காவும! உந்தன் கரத்தினில் வைத்து 2.உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும், நலமாய்ச் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா, வெல்லுவேன் 3.கஷ்டம் நஷ்டம் வந்தாலும், துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும், அஷ்டதிக்கும் ஆளும் தேவனே, அடியேன் உம்மில் அமரச்செய்திடும் 4.உந்தன் சித்தமே செய்வேன், என்றன் சித்தம் ஒழித்திடுவேன், எந்த இடம் எனக்குக் காட்டினும், இயேசுவே, அங்கே இதோ! போகிறேன் 5.ஒன்றுமில்லை நான் ஐயா! உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்; அன்று சீஷர்க்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanthaen Ennai Yesuvae, Indha Naeramae Umakkae. Undhanukkae Oozhiyanjseyyath Thanthaen Ennaith Thaangkiyarulum; 1.jeevakaalam Muzhuthum Thaevapani Seythituvaen, Poovil Katum Por Purikaiyil Kaavuma! Undhan Karatthinil Vaitthu 2.ulakor Ennai Nerukkip Palamaay Yuttham Seythitinum, Nalamaaych Sarva Aayudham Poontu Naanilatthinil Naathaa, Velluvaen 3.kashtam Nashtam Vanthaalum, Thushtar Kootich Soozhnthittaalum, Ashtathikkum Aalum Devanae, Atiyaen Ummil Amarachseythitum 4.undhan Sitthamae Seyvaen, Endran Sittham Ozhitthituvaen, Endha Idam Enakkuk Kaattinum, Yesuvae, Angkae Itho! Pokiraen 5.onrumillai Naan Aiyaa! Ummaalanri Onrum Seyyaen; Anru Seesharkkalittha Aaviyaal Inrae Atiyaenai Nirappum!