பாடல் #2481
தடுக்கி விழுந்தோரை
🔤 Thatukki Vizhunthorai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2) தகப்பனே தந்தையே உமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி... போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே (2) எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே (2) உம் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே தகப்பனே... உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் அன்பு கூரும் எங்களை அரவணைத்து அதிசயம் செய்கின்றீர் பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்து பரலோகம் கூட்டிச் செல்வீர் உம் அரசின் மகிமை மாட்சிதனை அறிவித்து மகிழ்ந்திடுவேன் உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே தியானித்து துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thatukki Vizhunthorai Thaangkukireer Thaazhtthappattorai Thookkukireer (2) Thakappanae Thanthaiyae Umakkuth Thaan Aaraadhanai (2) Thatukki... Porrudhalukkuriya Periyavarae Thooyavar Thooyavarae (2) Ellaarukkum Nanmai Seypavarae Irakkam Mikundhavarae (2) Um Naamam Uyaranumae Athu Ulakengkum Paravanumae Thakappanae... Ummai Nokki Manraatum Yaavarukkum Arukil Irukkinreer Kooppitudhal Kaettu Kurai Neekkuveer Viruppam Niraivaerruveer Uyirinanggal Ellaam Ummaitthaanae Nokkip Paarkkindrana Aertravaelaiyil Unavalitthu Aekkamellaam Niraivaerruveer Anpu Koorum Enggalai Aravanaitthu Athisayam Seykinreer Parrik Konda Yaavaraiyum Paathukaatthu Paralogam Koottich Selveer Um Arasin Makimai Maatsidhanai Arivitthu Makizhnthituvaen Um Valla Seyalkal Anaitthaiyumae Thiyaanitthu Thuthitthituvaen