பாடல் #2476
ஞான சுவிசேஷஷமே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே. ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, - ஞான 1.சத்திய வாக்கியமே, சந்தோஷ பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சலாக்கியமே, - ஞான 2.நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே, துதிபெருகும் பொங்கமே, - ஞான 3.அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும். - ஞான 4.யேசுவண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும், பேசும் பவத்தைப் போக்கும், பேதமையோரைக் காக்கும். - ஞான