பாடல் #2467
ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவே
🔤 Jeya Raaja Koti Aerrik Kaattavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவே அமராடச் செல்லுவோம். வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவே பூரிப்போடு பாடுவோம். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய். 2. எதிர் சேனை சீறிப் பாய்ந்தோடினும் ராஜ கொடி காட்டுவோம்! திரளான கூட்டம் தடுத்திரைந்தும் வெற்றி சிறந்தேறுவோம். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய். 3. எந்த தேச ஜாதி பாஷைக்காரரும் சுவிசேஷம் கேட்கையில் யேசு நாதர் ஜெய கோலம் வரவும் மா சமீப மாதலால். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய். 4. அந்த நல்ல காலம் வந்தவுடனே ராஜரீகம் பண்ணுவார். அவபக்தி யாவும் ஒழிந்திடவே நீதிமுறை நாட்டுவார். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Jeya Raaja Koti Aerrik Kaattavae Amaraadach Selluvom. Verri Maalai Sooti Jeyam Peravae Poorippotu Paatuvom. Selluvom - Velluvom Nam Yaesu Naadhar Moolamaay Verri Sirappaar - Aaluvaar Poomi Engkum Jothiyaay. 2. Ethir Saenai Seerip Paaynthotinum Raaja Koti Kaattuvom! Thiralaana Koottam Thatutthirainthum Verri Siranthaeruvom. Selluvom - Velluvom Nam Yaesu Naadhar Moolamaay Verri Sirappaar - Aaluvaar Poomi Engkum Jothiyaay. 3. Endha Thaesa Jaathi Paashaikkaararum Suvisaesham Kaetkaiyil Yaesu Naadhar Jeya Kolam Varavum Maa Sameeba Maadhalaal. Selluvom - Velluvom Nam Yaesu Naadhar Moolamaay Verri Sirappaar - Aaluvaar Poomi Engkum Jothiyaay. 4. Andha Nalla Kaalam Vandhavudanae Raajareegam Pannuvaar. Avapakthi Yaavum Ozhinthidavae Neethimurai Naattuvaar. Selluvom - Velluvom Nam Yaesu Naadhar Moolamaay Verri Sirappaar - Aaluvaar Poomi Engkum Jothiyaay.