பாடல் #2463
ஜெபம் மறவாதே
🔤 Jebam Maravaathae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபம் மறவாதே நேசனே - எக்காலமும் நீ! 1.ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. - ஜெப 2.அம்பரன் கற்பனை நோக்கு, அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. - ஜெப 3.பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதந்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. - ஜெப 4.விசுவாச நேசத்தோடு மிகும் பக்தியோடு நாடு; நிச்சயமாய் பரனைத் தேடு; நேர்மையுடனே ஓடு. - ஜெப 5.பகலுடன் இரவிலும், பணிவுடன் குறைவிலும், திகிலிலும் மகிழ்விலும், செல்வம் வறுமையிலும். - ஜெப 6.தேவ அரசாட்சிக்காக ஜெபி, உன்றன் குறைபோக, ஆவலுடன் பிறர்க்காக அன்புடன் ஜெபிப்பா யாக. - ஜெப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebam Maravaathae Naesanae - Ekkaalamum Nee! 1.jebam Paramanudan Paechsu; Thaevai Yellaam Atthaa Laachsu; Thapa Visuvaasi Moochsu; Thakaathelaam Atthaal Pochsu. - Jeba 2.ambaran Karpanai Nokku, Avaratharumai Vaakku; Nampich Santhaegam Pokku; Nalam Varath Theemai Neekku. - Jeba 3.paeyai Jebatthotu Vendra, Piriya Naamamung Konda, Naeya Sudhandhanaith Thandha, Nin Malanukkae Yugandha. - Jeba 4.visuvaasa Naesatthotu Mikum Pakthiyotu Naatu; Nicchayamaay Paranaith Thaetu; Naermaiyudanae Otu. - Jeba 5.pakaludan Iravilum, Panivudan Kuraivilum, Thikililum Makizhvilum, Selvam Varumaiyilum. - Jeba 6.thaeva Arasaatsikkaaga Jepi, Undran Kuraipoga, Aavaludan Pirarkkaaga Anpudan Jepippaa Yaaga. - Jeba