பாடல் #2453
ஜெப சிந்தை எனில்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை அபயமென் றுனக் குக்கை அளித்தேன் பொற்பாதா --- ஜெப உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும், சடமுலகப் பேயை வெல்லும் - நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய, பேய்க்கண மோடுபோர் செய்ய - நல் ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப