பாடல் #2447
ஜீவாதிபதி ஜோதியே
🔤 Jeevaathibathi Jothiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஜீவாதிபதி, ஜோதியே பக்தரின் இன்ப யேசுவே, லோகில் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும். 2. பாதம் சேர்ந்தோரை மீட்பீரே; இவ்வுண்மை என்றும் மாறாதே; தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்குச் சம்பூரணர். 3. விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்; நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே. 4. மாறிடும் வாழ்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்; உம் அருள் பார்வை இன்பமே, விஸ்வாசிப்போர்க்குப் பாக்யமே. 5. தங்கும் எம்மோடு யேசுவே, எக்காலும் ஆற்றித் தேற்றுமே; காரிருள் பாவம் ஓட்டுமே, உம் தூய ஜோதி வீசுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Jeevaathibathi, Jothiyae Paktharin Inba Yaesuvae, Lokil Maa Inbam Rusitthum Saernthom Um Paadhamae Meentum. 2. Paadham Saernthorai Meetpeerae; Ivvunmai Enrum Maaraathae; Thaetuvorkku Neer Nallavar Parruvorkkuch Sampooranar. 3. Vin Appam Ummil Rusippom Murrum Utkolla Aasippom; Neer Jeeva Oorru Ummilae Ullatthin Thaagam Theerumae. 4. Maaritum Vaazhkai Yaavilum Em Aathmaa Ummai Vaanjsikkum; Um Arul Paarvai Inbamae, Visvaasipporkkup Paakyamae. 5. Thangkum Emmotu Yaesuvae, Ekkaalum Aarrith Thaerrumae; Kaarirul Paavam Ottumae, Um Thooya Jothi Veesumae.