பாடல் #2443
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
🎙 கிறிஸ்தவ பாடல்
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே கிருபை மேலானதே கிருபை மேலானதே போக்கிலும் வரத்திலும் என்னைக் காத்தது கிருபையே கால்கள் இடறாமல் என்னைக் காத்தது கிருபையே பெலவீன நேரங்களில்- உம் கிருபை என் பெலனானதே சோர்வுற்ற வேளைகளில் – உம் கிருபை எனை தாங்கிற்றே கஷ்டத்தின் நேரங்களில்- உம் கிருபை எனைக் காத்ததே கண்ணீரின் மத்தியிலும்-உம் கிருபை எனைத் தேற்றுதே