பாடல் #2431
ஜீவ வசனம் கூறுவோம்
🔤 Jeeva Vasanam Kooruvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ வசனம் கூறுவோம் - சகோதரரே சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த ஜீவாதிபதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. 1. பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள் பேர் பட்டு மடியும் வேளையில் பேதைமையோடு பிடிவாத மருள் மிகுந்து வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. 2. நாடு தனிலே அலைந்தோம் கிறிஸ்துவினால் கர்த்தர் ஊழியத்தில் அமர்ந்தோம் நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த நல்ல ரூடவ்வு வரங்கள் எல்லாரும் கண்டடைய. 3. பூலோகம் எங்கும் நம்மையே கிறிஸ்து நாதர் போகச் சொல்லி விதித்தாரே காலா காலங்களிலும் கூடியிருப்போம் என்ற கர்த்தர் வாக்கை நினைத்து எத்தேசமும் திரிந்து. 4. விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்து நம்மை மீட்கக் குருசில் இறந்தார் மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசி குப்பை என்றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Vasanam Kooruvom - Sakodhararae Saernthae Ekkaalam Oothuvom. Paavigal Maelurukip Paatubattu Marittha Jeevaathibathi Yaesu Sinthai Makizhnthidavae. 1. Paadhakap Paeyin Valaiyil Aiyo Thiral Paer Pattu Matiyum Vaelaiyil Paethaimaiyotu Pitivaadha Marul Mikunthu Vaedhanai Thaanataiyap Povor Kathi Peravae. 2. Naatu Thanilae Alainthom Kiristhuvinaal Kartthar Oozhiyatthil Amarnthom Naatu Nakar Kiraaman Thaeti Naam Pertrataindha Nalla Roodavvu Varanggal Ellaarum Kandataiya. 3. Poologam Engkum Nammaiyae Kiristhu Naadhar Pogach Solli Vithitthaarae Kaalaa Kaalanggalilum Kootiyiruppom Endra Kartthar Vaakkai Ninaitthu Etthaesamum Thirinthu. 4. Vinnin Makimai Thuranthaar Kiristhu Nammai Meetkak Kurusil Iranthaar Mannin Pugazh Perumai Ellaam Thoosi Kuppai Enrennich Siluvaidhanai Etutthu Makizhchsiyotu.