பாடல் #2415
சோப்பு வாங்கினா சீப்பு இலவசம்
🔤 Soppu Vaangkinaa Seeppu Ilavasam
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோப்பு வாங்கினா சீப்பு இலவசம் - இயேசு இரட்சிப்பு இலவசம் - இந்த சோப்பு வாங்கினா - பாவ மன்னிப்பு இலவசம் சோப்பு வாங்கினா சீப்பு இலவசம் விலை கொடுத்து வாங்கும் சோப்பில் வாசனை இருக்கும் - சில உடம்புக்கு அது ஒத்துகாட்டி வியாதி உண்டாக்கும் இயேசு என்னும் சோப்பில் அற்புத வாசனை இருக்கும் - ஜனங்க பாவம் நீக்கி இரட்சிக்கின்ற வல்லமை இருக்க இயேசு என்னும் சோப்பை யூஸ் பண்ணுங்க பிசாசின் கிரியைகளை அழிக்கும் இந்த சோப்புங்க இருதயத்திலே இருக்குதுங்க பலவகைப் பாவம் எத்தனை சோப்புத் தேய்ச்சுக் குளிச்சாலும் போகாது சாபம் நெஞ்சுக்குள்ளே இயேசுவை நீ கூட்பிட்டு பாரு நீசப்பாவமெல்லாம் ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும் பாரு இயேசுவைத்தான் நீங்க ருசித்து பாருங்க உங்க துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறுங்க அமெரிக்கா ரஷ்யாவிலே செய்ததுமில்லீங்க தென் ஆப்பிரிக்கா ஐரோப்பாவிலும் செய்ததுமிலீங்க ஆசியாவின் கண்டத்திலே பிறந்த சோப்புங்க - நம்ம இந்தியாவை இரட்சிக்க வந்த சோப்புங்க பரலோக முத்திரை போட்ட சோப்புங்க இயேசு இரத்தத்தாலே செய்து தந்த சோப்புங்க இரட்சிப்பு வந்தா சந்தோஷம் இலவசம் - இயேசு இரட்சகர் வந்தா சமாதானம் இலவசம் வியாதிகள் வந்தா தெய்வீக சுகம் இலவசம் - கொடிய வேதனை வந்தா நமக்கு ஆறுதல் இலவசம் இயேசுவுக்குள் வல்லமை தான் இருக்குது - அவரை ஏற்றுக் கொண்டா வியாதி எல்லாம் பறக்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Soppu Vaangkinaa Seeppu Ilavasam - Yesu Iratsippu Ilavasam - Indha Soppu Vaangkinaa - Paava Mannippu Ilavasam Soppu Vaangkinaa Seeppu Ilavasam Vilai Kotutthu Vaangkum Soppil Vaasanai Irukkum - Sila Udampukku Athu Otthukaatti Viyaathi Untaakkum Yesu Ennum Soppil Arpudha Vaasanai Irukkum - Janangga Paavam Neekki Iratsikkindra Vallamai Irukka Yesu Ennum Soppai Yoos Pannungga Pisaasin Kiriyaigalai Azhikkum Indha Soppungga Irudhayatthilae Irukkuthungga Palavakaip Paavam Etthanai Sopputh Thaeychsuk Kulichsaalum Pokaathu Saabam Nenjsukkullae Yesuvai Nee Kootpittu Paaru Neesappaavamellaam Oti Marainjsu Olinjsitum Paaru Yesuvaitthaan Neengga Rusitthu Paarungga Ungga Thukkamellaam Santhoshamaay Maarungga Amerikkaa Rashyaavilae Seythathumilleengga Then Aappirikkaa Airoppaavilum Seythathumileengga Aasiyaavin Kandatthilae Pirandha Soppungga - Namma Inthiyaavai Iratsikka Vandha Soppungga Paraloga Mutthirai Potta Soppungga Yesu Ratthatthaalae Seythu Thandha Soppungga Iratsippu Vanthaa Santhosham Ilavasam - Yesu Iratsakar Vanthaa Samaathaanam Ilavasam Viyaathigal Vanthaa Theyveega Sugam Ilavasam - Kotiya Vaedhanai Vanthaa Namakku Aarudhal Ilavasam Yesuvukkul Vallamai Thaan Irukkuthu - Avarai Aerruk Kontaa Viyaathi Ellaam Parakkuthu