பாடல் #2406
சேற்றிலிருந்து என்னை தூக்கி
🎙 கிறிஸ்தவ பாடல்
சேற்றிலிருந்து என்னை தூக்கி கன்மலை மேல் நிறுத்தினீர் உம்மை போற்றுவேன் இயேசு தேவா உம்மை உயர்த்துவேன் இயேசு நாதா என் கால்கள் தள்ளாடும்போது உம் வலக்கரம் தாங்கினீர் உம்மை போற்றுவேன் இயேசு தேவா உம்மை உயர்த்துவேன் இயேசு நாதா என் மாராவின் வாழ்வினையே மதுரமாய் மாற்றினீர் நான் தனிமையில் வாடும்போது என் துணையாக மாறினீர் என் இருளான வாழ்வினை நீர் வெளிச்சமாய் மாற்றினீர்