பாடல் #2405
சேர் ஐயா எளியேன்
🔤 Saer Aiyaa Eliyaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேர், ஐயா; எளியேன் செய் பவ வினை தீர் ஐயா, 1.பார், ஐயா, உன் பதமே கதி; - ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி - எனைச் - சேர் 2.தீதினை உணர்ந்த சோரனைப் - பர தீசிலே அன்று சேர்க்கலையோ? - எனைச் - சேர் 3.மாசிலா கிறிஸ் தேசுபரா, - உனை வந்தடைந்தனன்; தஞ்சம், என்றே - எனைச் - சேர் 4.தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் - தமைத் தள்ளிடேன் என்று சாற்றினையே; - எனைச் - சேர் 5.பாவம் மா சிவப்பாயினும் - அதை பஞ்செனச் செய்வேன், என்றனையே; - எனைச் - சேர் 6.தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த - யேசு தேவனே, கருணாகரனே, - எனைச் - சேர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saer, Aiyaa; Eliyaen Sey Pava Vinai Theer Aiyaa, 1.paar, Aiyaa, Un Pathamae Kathi; - Aezhaip Paavimael Kan Paartthirangki - Enaich - Saer 2.theethinai Unarndha Soranaip - Para Theesilae Anru Saerkkalaiyo? - Enaich - Saer 3.maasilaa Kiris Thaesubaraa, - Unai Vandhataindhanan; Thanjjam, Enrae - Enaich - Saer 4.thanjjam Enrunaith Thaan Atainthor - Thamaith Thallitaen Enru Saarrinaiyae; - Enaich - Saer 5.paavam Maa Sivappaayinum - Athai Panjsenach Seyvaen, Endranaiyae; - Enaich - Saer 6.theeyarkkaayp Pinaiyaay Marittha - Yaesu Devanae, Karunaagaranae, - Enaich - Saer