பாடல் #2381
சூரியன் அஸ்தமித்து
🔤 Sooriyan Asthamitthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சூரியன் அஸ்தமித் திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள் - உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். - சூரி 1.பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். - சூரி 2.இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம் தீர்ந்து களிக்கக் கருணை கூர்வாய்! அஷ்டதிக்கும் ஆள்வோய், அபயம் அபயம் என்றோம். - சூரி 3.எளியோர் வறுமையில் இன்னருள் ஊற்றுவாய், விழிப்போடிரவிற் கண்ணீர் விடுவோரைத் தேற்றுவாய், வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய், பழி பாவம் துணிவோரைத் தடுத்தாண்டு மாற்றுவாய். - சூரி 4.சருவ சக்தி சதா காலமும் உனதல்லோ? வருத்த மெல்லாம் ஓடும் வார்த்தை ஒன்று சொல்ல, உரித்தாய்க் கரத்தினால் உன்னடியாரைத் தொடுவாயே, கருகுங் கங்குலிலும் யாம் களிப்பாய்ச் சுகிப்போமே. - சூரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sooriyan Asthamith Thiruntitum Vaelaiyil Soozhndhanar Piniyaaligal - Unai Nerungkith Thuyar Theera Vaentinarae Innaeram Unthayai Thaetum Ivvatiyaarin Innalellaam Oda Anpae Unnarul Eevaay. - Soori 1.paeyin Akorathvam Unaikkantu Parandhathu, Noyum Nirppandhamum Nee Thoda Ozhindhana, Vaaykkum Sukaanandham Unai Nampinorkkellaam, Thaayk Karunaiyutaiyoy, Inrum Un Thayai Koorvaay. - Soori 2.ishtarin Thurogatthaal Idar Atainthuzhalvorum, Thushtar Seythunbatthaal Thayangkith Thavipporum, Kashtamellaam Theernthu Kalikkak Karunai Koorvaay! Ashtathikkum Aalvoy, Abayam Abayam Enrom. - Soori 3.eliyor Varumaiyil Innarul Oorruvaay, Vizhippotiravir Kanneer Vituvoraith Thaerruvaay, Vazhi Thappi Alaivorai Vazhi Kaatti Aarruvaay, Pazhi Paavam Thunivoraith Thatutthaantu Maarruvaay. - Soori 4.saruva Sakthi Sathaa Kaalamum Unathallo? Varuttha Mellaam Otum Vaartthai Onru Solla, Uritthaayk Karatthinaal Unnatiyaaraith Thotuvaayae, Karukung Kangkulilum Yaam Kalippaaych Sukippomae. - Soori