பாடல் #2371
சுத்த ஆவி என்னில் தங்கும்
🔤 Suttha Aavi Ennil Thangkum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பசுத்த ஆவி, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே; பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும். 2. சத்திய ஆவி, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே! தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே; நீர் என்னில் பிரவேசியும், ஆண்டுகொள்ளும் நித்தமும். 3. நேச ஆவி, என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே! துர்ச் சுபாவம் போகப்பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும். 4. வல்ல ஆவி, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே! சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங்கொள்ளவே நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும். 5. நல்ல ஆவி, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே; பகை, மேட்டிமை, விரோதம், மற்றும் தீமை யாவுமே என்னை விட்டகற்றுமேன் என்னைச் சீர்ப்படுத்துமேன். 6. தெய்வ ஆவி, என்னில் தங்கும் நானும் உம்மில் தங்கவே, மோட்ச பாதையில் நடத்தும் இயேசுவின் முகத்தையே தெளிவாகக் காண்பியும் என்னை முற்றும் ரட்சியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Pasuttha Aavi, Ennil Thangkum, Naanum Sutthan Aagavae; Paava Azhukkellaam Neekkum; Um Aalayamaagavae Ennai Neer Singkaariyum, Vaasam Pannum Nitthamum. 2. Satthiya Aavi, Ennil Thangkum, Naanum Satthiyan Aagavae! Theyva Pakthi Ennil Murrum Valarnthaerach Seyyumae; Neer Ennil Piravaesiyum, Aantukollum Nitthamum. 3. Naesa Aavi, Ennil Thangkum, Naanum Naesan Aagavae! Thurch Supaavam Pogappannum; Anpil Naan Vaeroondravae Anpin Svaalai Ezhuppum, Menmaelum Valartthitum. 4. Valla Aavi, Ennil Thangkum, Naanum Vallon Aagavae! Saatthaan Ennaith Thoontivitum Pothu Jeyangkollavae Neer En Pakkatthil Irum, Ennaip Palappatutthum. 5. Nalla Aavi, Ennil Thangkum, Naanum Nallon Aagavae; Pakai, Maettimai, Virodham, Marrum Theemai Yaavumae Ennai Vittakarrumaen Ennaich Seerppatutthumaen. 6. Theyva Aavi, Ennil Thangkum Naanum Ummil Thanggavae, Motsa Paathaiyil Natatthum Yesuvin Mugatthaiyae Thelivaagak Kaanpiyum Ennai Murrum Ratsiyum.