பாடல் #2355
சீரேசு பாலன் ஜெயமனு
🔤 Seeraesu Paalan Jeyamanu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீரேசு பாலன் ஜெயமனு வேலன் சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன், தாராள மாகத் தாமே மனுவான --- சீரேசு 1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக மண்ணி லேகின மாட்சிமை யாலே, விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? --- சீரேசு 2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை இந்நிலத்தினில் எழில்சமா தானம், மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? --- சீரேசு 3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே, கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க தீபமாய் வந்த தேவமைந்தனான --- சீரேசு 4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும் சித்தம் உருகிச் சீர்கூற வேணும், அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்; பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் --- சீரேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeraesu Paalan Jeyamanu Vaelan Seer Naamatthaith Thinamae Porruvomae Paaraalum Vaendhan Pakaronnaa Maindhan, Thaaraala Maagath Thaamae Manuvaana --- Seeraesu 1. Ennarum Perumaan Aezhaich Saayalaaga Manni Laekina Maatsimai Yaalae, Vinnavarkal Portra, Verrikkavi Saartra Vannam Paati Naam Makizhnthida Vaentaamo? --- Seeraesu 2. Unnatha Paranuk Koppillaa Makimai Innilatthinil Ezhilsamaa Thaanam, Mannuyirkal Meethu Maapiriyam Ongga Thannuyir Thandha Thayavai Enna Solvom? --- Seeraesu 3. Paavap Piniyaalae Paadhakaraip Polae Saabatthai Nammael Naam Thaetinomae, Kobatthai Ozhitthae Kuvalayatthai Meetka Theebamaay Vandha Thaevamaindhanaana --- Seeraesu 4. Nitthanae, En Paavam Etthanaiyaanaalum Sittham Urukich Seerkoora Vaenum, Atthanae, Un Paadham Antinaen Ippothum; Patthiyaay Unnaip Pakaruvaen Eppothum --- Seeraesu