பாடல் #23398
நாங்கள் ஆராதிப்போம்
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
நாங்கள் ஆராதிப்போம் எங்கள் இயேசுவை நாங்கள் ஆராதிப்போம் எங்கள் தேவனை..ஓ - 2 ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் நடனமாடி துதித்திடுவோம் ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் நன்றி சொல்லி துதித்திடுவோம் 1. ஆயிரம் துன்பம் வந்தாலும் நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ துன்பமே வாழ்க்கையானாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்கப்போவதில்லை - 2 2. வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும் நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்..ஓ. வேதனை பெருகிவிட்டாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்கப்போவதில்லை - 2 3. மலைகள் விலகினாலும் நீங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ. பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2 இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள் அவரை மறக்க போவதில்லை - 2