பாடல் #2324
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
🔤 Sinnanjsiru Sudhanae Ennarum Thavamae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு கூடுண்டு பறவைகட்கு பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே வீடுண்டோ உந்தனுக்கு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க காரணம் நீரானீரோ கோர வெம்பகைகள் பாரச்சுமைகள் தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும் முற்றிலும் நீரல்லவோ குற்றம் துடைக்க பற்றினை நீக்க உற்றவர் நீரல்லவோ 4. பாசமாய் வந்து காசினை மீட்ட நேசமுள்ள ஏசுவே நீச சிலுவை தொங்கப் பிறந்த தாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnanjsiru Sudhanae Ennarum Thavamae Mannar Mannavanae Unnathathiruvae 1. Kaatuntu Narikku Kuzhigalumuntu Kootuntu Paravaigatku Paatuntu Umakku Manidhakumaaranae Veetunto Undhanukku 2. Thaarani Thuyarkal Thunbanggal Neengga Kaaranam Neeraaneero Kora Vembakaigal Paarachsumaigal Theera Marunthaaneero – Aa..aa..aa 3. Surtram Thaay Thanthai Marrumanaitthum Murrilum Neerallavo Kurtram Thutaikka Parrinai Neekka Urtravar Neerallavo 4. Paasamaay Vanthu Kaasinai Meetta Naesamulla Aesuvae Neesa Siluvai Thonggap Pirandha Thaasarin Thaabaramae – Aa..aa..aa