பாடல் #2314
சிந்தைசெய்யும் எனில்
🔤 Sinthaiseyyum Enil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்தைசெய்யும் எனில் நிரம்புவீர், தேவாவி உமைச் சிந்தைசெய்யும் என்னை நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர். - சிந்தை 1. பாலனாய்ப் பரமதந்தைக்கும் - அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் - அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர். - சிந்தை 2. திரியேகதேவனே என்றே - அவரைவிட்டுப் பிரியேன் என் பிராணன்போனாலும், அரிய அவரின் தயையே - எனக்கு என்றும் உரிய ஒன்றான பொருளே, பொய், லோகம், மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும் மெய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனக்கென்றும். - சிந்தை 3. பக்தியுள்ள ஜீவியம் செய்து, - பகலின் சேயாய் எத்திசையினும் விளங்கிடச் சுத்தமனம் செய்கையைத்தாரும் - எனைநான் என்றும் தத்தம்செய்யக் கற்பித்தருளும், உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும் என்னகத்தினின்றும் துதிஏறுவதாக, ஆமென். - சிந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinthaiseyyum Enil Nirampuveer, Thaevaavi Umaich Sinthaiseyyum Ennai Nirappuveer Thanthaip Paranaarininrum Maindhanaar Kiristhininrum Vinthaiyaayp Purappattaekum Vitthakatthin Aaviyaeneer. - Sinthai 1. Paalanaayp Paramathanthaikkum - Avarinnaeya Seelanaam Kiristhiyaesukkum Saalavae Enrennaich Saertthitteer - Atthaalae Thaeva Kolam Endran Panggathaayirru. Thanthaithaayar Thandha Vaakkaich Sondhavaayaal Naan Kotukka Vanthirukkum Vaelaidhanil Thanthaisudhan Aaviyae Neer. - Sinthai 2. Thiriyaegadevanae Enrae - Avaraivittup Piriyaen En Piraananponaalum, Ariya Avarin Thayaiyae - Enakku Enrum Uriya Onraana Porulae, Poy, Logam, Maamsam Ennaip Pititthizhutthaalum Mey Parisuttha Aavi Udhavuveer Enakkenrum. - Sinthai 3. Pakthiyulla Jeeviyam Seythu, - Pakalin Saeyaay Etthisaiyinum Vilangkidach Sutthamanam Seykaiyaitthaarum - Enainaan Enrum Thatthamseyyak Karpittharulum, Unnathatthil Vaazh Thanthaikkum Uyarsudhan Aaviyarkkum Ennakatthininrum Thuthiaeruvathaaga, Aamen. - Sinthai