பாடல் #2313
இந்தக் கோலங் கொண்ட தேதென்
🔤 Indhak Kolang Konda Thaethen
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தக் கோலங் கொண்ட தேதென் பரம தேவா. கந்தைத் துணியணிந்து விந்தைக் கொட்டிலுக்குள்ளே. 1.நித்திய பிதாவினொரு புத்திரனென வுயருஞ் சத்தியக் கிறிஸ்தனாதி வஸ்துன் மகத்து வந்தானோ. 2. சுந்தரப் பரம சேனை சந்தத மகிழ்ந்து பாடி வந்தனஞ் செய்யு மகிமை மந்தையாய றறிவாரோ. 3. வானமெல்லாங் கொள்ளானை மாட்டுக் கொட்டிற் கொள்ளுமோ ஞான பரனே யிதுந் தனன்மைப் பகுதித் தானோ. 4. முக்கியப் பிதாவோடொத்த முதன்மைத் திருக்குமாரா திக்கற்றவராய் முன்னணைக்குட் கிடக்கின்றீரோ. 5. வல்லமை யளவில்லாத மகிமைப் பிரதாப மாற்றிப் புல்லருக்குப் பண் செய்வதற்குச் செல்லத் துரை வந்தீரோ. 6. வளமைச் சுயாதிபதி மைந்தர் வடிவமானார் எளிமைக் கன்னியாஸ்திரியோ இறைவர்க்குத் தாயானது. 7. பாட்டுத் திறத்திலுனைப் படிக்கத் திருநெல் வேலி நாட்டுப் புறத்து வேத நாயகனறிவானோ.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhak Kolang Konda Thaethen Parama Thaevaa. Kanthaith Thuniyaninthu Vinthaik Kottilukkullae. 1.nitthiya Pithaavinoru Putthiranena Vuyarunj Satthiyak Kiristhanaathi Vasthun Makatthu Vanthaano. 2. Sundharap Parama Saenai Sandhatha Makizhnthu Paati Vandhananj Seyyu Makimai Manthaiyaaya Rarivaaro. 3. Vaanamellaang Kollaanai Maattuk Kottir Kollumo Njaana Paranae Yithun Thananmaip Pakuthith Thaano. 4. Mukkiyap Pithaavotottha Mudhanmaith Thirukkumaaraa Thikkartravaraay Munnanaikkut Kidakkinreero. 5. Vallamai Yalavillaadha Makimaip Pirathaaba Maarrip Pullarukkup Pan Seyvatharkuch Sellath Thurai Vantheero. 6. Valamaich Suyaathibathi Maindhar Vativamaanaar Elimaik Kanniyaasthiriyo Iraivarkkuth Thaayaanathu. 7. Paattuth Thiratthilunaip Patikkath Thirunel Vaeli Naattup Puratthu Vaedha Naayakanarivaano.