பாடல் #2287
சரணம் நம்பினேன் யேசு
🔤 Saranam Nampinaen Yaesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம் நம்பினேன் யேசு நாதா - இது தருணம், தருணம் உன்றன் கருணை கூர், வேதா - சரணம் 1.நின் அருளால் இங்கே வந்து, - என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து, முன் னாள் வினையைத் துறந்து, - ஆதி மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. - சரணம் 2.சன்னதி முன் தொண்டன் நின்றே, - என்றும் தாயான கருணை உனக்கு உண்டென்றே, சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச் சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. - சரணம் 3.அலைவாய்த் துரும்புபோல் ஆடி, - உன ததி கரணை வரச் செம்பாதந் தேடித், தொலையாத வாழ்வை மன்றாடி, - அன்பின் தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. - சரணம் 4.இனிய கருணை பொழிவேதா, - எனை இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா, கனி வினை நீக்கிய நீதா, - நசரைக் கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. - சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam Nampinaen Yaesu Naathaa - Ithu Tharunam, Tharunam Undran Karunai Koor, Vaethaa - Saranam 1.nin Arulaal Ingkae Vanthu, - Enrum Nin Ataikkalamaaga Ennaiyae Thanthu, Mun Naal Vinaiyaith Thuranthu, - Aathi Moolamae, Unak Kolam, Ratsiyum Enru. - Saranam 2.sannathi Mun Thondan Ninrae, - Enrum Thaayaana Karunai Unakku Untenrae, Sennimael Karam Thookki Ninrae, Unaich Saevikkum Eliyaenaik Kopikkaay Enrae. - Saranam 3.alaivaayth Thurumpupol Aati, - Una Thathi Karanai Varach Sempaadhan Thaetith, Tholaiyaadha Vaazhvai Manraati, - Anpin Thothra Sangkeertthana Keedhanggal Paati. - Saranam 4.iniya Karunai Pozhivaethaa, - Enai Iru Karatthaal Anai En Kiristhu Naathaa, Kani Vinai Neekkiya Neethaa, - Nasaraik Kartthaathi Kartthaa, Un Karunaiyaith Thaa, Thaa. - Saranam