பாடல் #2286
சரணம் சரணம் சரணம்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
சரணம், சரணம், சரணம் எனக்குள் தயைபுரியும், என்பரனே. மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் மன்னா, ஓ சன்னா! - சர 1.தரணிதனில் வந் தவதரித்த தற் பரனே, எனக்காக - வலு மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென் மகிமை, நித்திய பெருமை. - சர 2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத் துரோகியான எனக்கு - நீயே இரவு பகல் என் குறைவு நீக்க, உண் டேது நலம் என்மீது. - சர 3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத் தானே வந்து தேட; - உனக் கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக் கற்புதமாம் முடி சூட. - சர 4.எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை ஏழை அடியேனே - பற்றி இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே இரங்காய், எனக் கிரங்காய். - சர