பாடல் #2284
சரணம் சரணம்
🔤 Saranam Saranam
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா 1.பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரிகாசம் பண்ணினான் - சரணம் 2.கற்றூணில் சேர்த்திருகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார் - சரணம் 3.முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார் - சரணம் 4.கையினால் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் - சரணம் 5.துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார் - சரணம் 6.முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே, முன்னவனைத் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் - சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam, Saranam, Ananthaa, Sachsithaananthaa, Thaaveethin Mainthaa Osannaa! Saranapathanthaa 1.pitthan Enru Vellai Araich Sattai Aninthu, Paedhaka Aerothae Parikaasam Panninaan - Saranam 2.karroonil Saertthirugak Katti, Valuvaayk Kaavalan Than Saervai Ellaam Kooti Alitthaar - Saranam 3.mullin Muti Seythazhutthi, Vallal Enavae, Moorkka Mudanae Thatikon Taarkka Atitthaar - Saranam 4.kaiyinaal Sengkolathenru Moongkil Onrittu, Kaavalan Nee Yoodharukken Roviyanj Sonnaar - Saranam 5.thuppinar Mugatthinil Athikkiramamaay Thunniya Kaikkolai Vaangki Senniyil Pottaar - Saranam 6.muzhangkaalilae Irunthu Thendan Panniyae, Munnavanaith Thaan Irainjsik Kannattharainthaar - Saranam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E