பாடல் #2279
சமஸ்த மண்டலத்தையும்
🔤 Samastha Mandalatthaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சமஸ்த மண்டலத்தையும் படைத்த நாதனே சமஸ்த ஜீவ கோடியும் போஷிக்கும் தேவனே. 2. உம்மாலே நாங்கள் இம்மட்டும் ஜீவித்து வாழ்கிறோம் ஊண் உடை சுகம் பெலமும் உம்மால் அடைகிறோம். 3. இதை அறிந்தும் வீணராய் நடந்து சீர் கெட்டோம் உம் நன்மை உணராதோராய் உம் தண்டனை பெற்றோம். 4. பருவ காலத்தில் மழை பெய்யாமல் போயிற்று இப்போது பஞ்சம் எங்களை நெருக்குகின்றது. 5. இரக்கமுள்ள தேவனே மா துன்பம் அடைந்தோம் பஞ்சம் நிவிர்த்தி செய்யவே பணிந்து கேட்கிறோம். 6. அருள் பொழிந்து மாரியை கர்த்தாவே சொரியும் அதால் உம் திவ்ய நாமத்தை அன்பாகப் போற்றுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Samastha Mandalatthaiyum Pataittha Naadhanae Samastha Jeeva Kotiyum Poshikkum Devanae. 2. Ummaalae Naanggal Immattum Jeevitthu Vaazhkirom Oon Utai Sugam Pelamum Ummaal Ataikirom. 3. Ithai Arinthum Veenaraay Natanthu Seer Kettom Um Nanmai Unaraathoraay Um Thandanai Perrom. 4. Paruva Kaalatthil Mazhai Peyyaamal Poyirru Ippothu Panjjam Enggalai Nerukkukindrathu. 5. Irakkamulla Devanae Maa Thunbam Atainthom Panjjam Nivirtthi Seyyavae Paninthu Kaetkirom. 6. Arul Pozhinthu Maariyai Kartthaavae Soriyum Athaal Um Thivya Naamatthai Anpaagap Porruvom.