பாடல் #2252
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
🔤 Sattham Kaettu Sittham Seyya
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ- ஆ- ஆ கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே - 2 கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும் உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினின்றும் விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம் உப்பைப்போல கரைந்திடுவோம் மெழுகைப்போல உருகிடுவோம் தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே குஜராத், பீஹார், இமயத்தில் ஏராளம் ஏராளமே இராஜஸ்தான், காஷ்மீர், ஒரிஸாவில் நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மைக் காணிக்கையாக்கிடுவோம் உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம் தேசம் இயேசுவைக் கண்டுவிடும் சபைகள் ஏராளம் பெருகிவிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sattham Kaettu Sittham Seyya Azhaikkiraarae - Yesu Sattham Kaettu Sittham Seyya Azhaikkiraarae Sattham Kaettu Sittham Seyya Varunthi Azhaikkinraarae Kaalatthin Vaegatthaip Paarkkumpothu - Aa- Aa- Aa Karutthaay Kavanamaay Jaakkirathaiyaay Vaazhnthu Vitumbati Azhaikkinraarae - 2 Karpanaigal Yaavum Nandrallavo - Aa- Aa- Aa- Aa Karpanaigal Yaavum Nandrallavo Athaik Kataippititthaaga Vaentumae Keezhppatindhavarkal Avarukkuch Sondha Sambatthu Allavo Keezhppatinthaal Aaseervaadham Perukum Keezhpatiyaavittaal Saabam Perukum Ulaka Maamisap Pitiyininrum - Aa- Aa- Aa- Aa Ulaka Maamisap Pitiyininrum Pisaasin Thanthira Valaiyininrum Vituvitthuk Kolvom Seyalpatuvom Saatthaanai Muriyatippom Uppaippola Karainthituvom Mezhukaippola Urukituvom Thaevai Athigam Aeraalam - Aa- Aa- Aa- Aa Thaevai Athigam Aeraalam Aeraalam Aeraalamae Kujaraath, Peehaar, Imayatthil Aeraalam Aeraalamae Iraajasthaan, Kaashmeer, Orisaavil Nee Sella Marutthaal Yaar Selluvaar? Verriyae Tharum Aandavarkku - Aa- Aa- Aa- Aa Verriyae Tharum Aandavarkku Nammaik Kaanikkaiyaakkituvom Udal Porul Yaavum Yesuvukkae Kaanikkaiyaakkituvom Thaesam Yesuvaik Kantuvitum Sapaigal Aeraalam Perukivitum