பாடல் #225
அருள்நாதா நம்பிவந்தேன்
🔤 Arulnaathaa Nampivanthaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில் பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால் சுத்திசெய்வீர் மாசில்லாத ரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன், பாதை காட்டுவீர் திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன், ஞானம் பெலனும் அக்னி நாவும் வல்ல வாக்கும் ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன், தவறாமலே என்னை என்றும் தாங்கி நின்று காருமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Arulnaathaa Nampivanthaen, Nokkakkataveer. Kaimaarinri Ennai Murrum Rakshippeer. 2. Thanjjam Vaenti Nampi Vanthaen Thirup Paadhatthil Paava Mannipparulveer In Naeratthil. 3. Thooymai Vaenti Nampi Vanthaen Undhan Aaviyaal Sutthiseyveer Maasillaadha Ratthatthaal. 4. Thunai Vaenti Nampi Vanthaen, Paathai Kaattuveer Thirupthi Seythu Nittham Nanmai Nalkuveer. 5. Sakthi Vaenti Nampi Vanthaen, Njaanam Pelanum Akni Naavum Valla Vaakkum Eenthitum. 6. Yesu Naathaa, Nampi Vanthaen, Thavaraamalae Ennai Enrum Thaangki Ninru Kaarumae.