பாடல் #2247
சங்கம் கூடி ஏழைக்கென்று
🔤 Sanggam Kooti Aezhaikkenru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சங்கம் கூடி ஏழைக்கென்று நல் விவேகத்துடனே அறம் செய்யும் குணம் நன்று அதைத் தாரும் தேவனே ஆஸ்தியுள்ளவர்கள் வந்து மா உதாரத்துடனே ஏழைகள் மேல் தயை வைத்து நன்மை செய்ய ஏவுமே. 2. நேசம் காட்டி ஓர் விதவை நல்ல மனதுடனே எளிமையில் போட்ட காசை மேன்மையாய்ப் புகழ்ந்தீரே தேவனே உம்மால் நாங்கள் நன்றாய்க் காக்கப்பட்டோமே இம்மைக்கேற்ற பாக்கியங்கள் உம்மால் பெற்றுக் கொண்டோமே. 3. நாதா நீர் பொழிந்த அருள் நாங்கள் எண்ணி அவ்வாறே எங்கள் சொந்தமான பொருள் வறியோர்க்கு ரூடவ்யவே தேவரீருக்கேற்றதான தர்ம சிந்தை நிறைவாய் எங்களுக்கிப்போதுண்டாக ஏவும் மா கடாட்சமாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sanggam Kooti Aezhaikkenru Nal Vivaegatthudanae Aram Seyyum Kunam Nanru Athaith Thaarum Devanae Aasthiyullavarkal Vanthu Maa Uthaaratthudanae Aezhaigal Mael Thayai Vaitthu Nanmai Seyya Aevumae. 2. Naesam Kaatti Or Vidhavai Nalla Manathudanae Elimaiyil Potta Kaasai Maenmaiyaayp Pugazhntheerae Devanae Ummaal Naanggal Nanraayk Kaakkappattomae Immaikkaertra Paakkiyanggal Ummaal Perruk Kontomae. 3. Naathaa Neer Pozhindha Arul Naanggal Enni Avvaarae Enggal Sondhamaana Porul Variyorkku Roodavyavae Thaevareerukkaertrathaana Tharma Sinthai Niraivaay Enggalukkippothuntaaga Aevum Maa Kataatsamaay.