பாடல் #2246
சகோதரர்களோருமித்து
🔤 Sakodhararkalorumitthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.சகோதரர்களொருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே. 2.ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் ஒழுகுமானந்தம் போலவே. 3.எர்மோன் மலையின் பேரிலும் இசைந்த சீயோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெய்கின்ற திவலைப் பணியைப் போலவே. 4.தேசம் மார்க்கம் இரண்டிற்கும் சேனை எகோவா தருகிற ஆசீர்வாதம் சீவனும் அங்கே என்றுமுள்ளதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.sakodhararkalorumitthuch Sanjjarippatho Etthanai Makaa Nalamum Inbamum Vaayttha Seyalaayirukkumae. 2.aaron Sirasil Vaarttha Nal Apishaegatthin Thailanthaan Oorith Thaatiyil Angkiyil Ozhukumaanandham Polavae. 3.ermon Malaiyin Paerilum Isaindha Seeyon Malaiyilum Saermaanamaayp Peykindra Thivalaip Paniyaip Polavae. 4.thaesam Maarkkam Irantirkum Saenai Ekovaa Tharukira Aaseervaadham Seevanum Angkae Enrumullathae.