பாடல் #224
அருள்நாதர் வரும்போது
🔤 Arulnaadhar Varumpothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அருள்நாதர் வரும்போது தம் சம்பத்தைச் சேர்ப்பார் சர்வ பக்தர் அருள் பெற்றார் தம் ரத்னம் என்பார். விடிவெள்ளியைப் போன்ற பிரகாசமாய் மீட்பர் க்ரீடத்தைச் சிங்காரிக்கும் நல்ரத்னம் ஆவார். 2. ராஜ்யம் தன்னில் நேசமாக தம் தாசரைச் சேர்ப்பார் தூய நெஞ்சர் நல்ல நேசர் தம் ரத்னம் என்பார். விடிவெள்ளியைப் போன்ற பிரகாசமாய் மீட்பர் க்ரீடத்தைச் சிங்காரிக்கும் நல்ரத்னம் ஆவார். 3. அருள்நாதர் தயை மீது மெய் நம்பிக்கை வைத்தார் சிறு பாலர் சிறு தாசர் தம் ரத்னம் என்பார். விடிவெள்ளியைப் போன்ற பிரகாசமாய் மீட்பர் க்ரீடத்தைச் சிங்காரிக்கும் நல்ரத்னம் ஆவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Arulnaadhar Varumpothu Tham Sambatthaich Saerppaar Sarva Pakthar Arul Perraar Tham Rathnam Enpaar. Vitivelliyaip Pondra Pirakaasamaay Meetpar Kreedatthaich Singkaarikkum Nalrathnam Aavaar. 2. Raajyam Thannil Naesamaaga Tham Thaasaraich Saerppaar Thooya Nenjjar Nalla Naesar Tham Rathnam Enpaar. Vitivelliyaip Pondra Pirakaasamaay Meetpar Kreedatthaich Singkaarikkum Nalrathnam Aavaar. 3. Arulnaadhar Thayai Meethu Mey Nampikkai Vaitthaar Siru Paalar Siru Thaasar Tham Rathnam Enpaar. Vitivelliyaip Pondra Pirakaasamaay Meetpar Kreedatthaich Singkaarikkum Nalrathnam Aavaar.