பாடல் #2238
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி
🔤 Kotaa Koti Sthotthiram Paati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே சேற்றிலிருந்து தூக்கியெடுத்துத் தேற்றியனைத்துக் காத்துக் கொண்டாரே – தேவசுதன் பாவியை மீட்கப் பரண் சித்தம் கொண்டார் பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார் பரமனிவ் வழியைத் தேடி வந்தாரே பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ பூவுலகில் தேவனின் சித்தம் செய்யும் படியாய் தாசனின் கோலம் தா மெடுத்தணிந்து தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும் தம்மை பலியாய் தத்தம் செய்தாரே எந்தனுக்காய் ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து கேடுவராது காக்கும் நல் மேய்ப்பர் இன்று மென் மேலே வைத்த நேசத்தால் என்றன்றும் நன்றி கூறித் துதிப்பேன் இறையவனை தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்து சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டீரே தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே தங்கியிருப்பேன் சீயோன் மலையில் நித்தியமாய் குயவனின் கையில் களிமண்ணைப் போல குருவே நீர் என்னை உருவாக்குமையா மாசற்ற மனவாட்டயாய் என்னைக் காத்துக் கொள்ளும்படி கருணைகூர் ஐயா ஏழை என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotaa Koti Sthotthiram Paati Kiristhuvin Anpai Rusippomae Saerrilirunthu Thookkiyetutthuth Thaerriyanaitthuk Kaatthuk Kontaarae – Thaevasudhan Paaviyai Meetkap Paran Sittham Kontaar Paralogam Thuranthu Paarinil Piranthaar Paramaniv Vazhiyaith Thaeti Vanthaarae Paadham Paninthaen Pathil Aethumunto Poovulakil Devanin Sittham Seyyum Patiyaay Thaasanin Kolam Thaa Metutthaninthu Tharparan Norukkach Sitthang Kontaalum Thammai Paliyaay Thattham Seythaarae Endhanukkaay Aatugalukkaay Uyirthanaik Kotutthu Kaetuvaraathu Kaakkum Nal Maeyppar Inru Men Maelae Vaittha Naesatthaal Endranrum Nanri Koorith Thuthippaen Iraiyavanai Thaaveethu Kotthirach Singgamaay Vanthu Saandhatthaal Ennaik Kavarnthu Konteerae Thaazhmaiyaana Aattuk Kuttiyudanae Thangkiyiruppaen Seeyon Malaiyil Nitthiyamaay Kuyavanin Kaiyil Kalimannaip Pola Kuruvae Neer Ennai Uruvaakkumaiyaa Maasartra Manavaattayaay Ennaik Kaatthuk Kollumbati Karunaikoor Aiyaa Aezhai Ennai