பாடல் #2231
கொல்கொதா மலை மேலே
🔤 Kolkothaa Malai Maelae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா மலை மேலே நானொரு காட்சி கண்டேன் குலை நடுங்கித் துடித்தெழுந்தே சிலுவையைக் கண்டேன் பாய்ந்தோடுதே இரத்தம் ஆறாய் பார்க்க முடியுமோ - அந்த கோரக் காட்சியை கொல்கொதாவில் நான் கண்டேன் கோரக் காட்சியை கூற முடியுமோ என்னால் அந்தக் கொடுமையை - கொல்கொதா மலை மேலே கன்னத்திலே அடித்து காரி உமிழ்ந்தான் ஈட்டியை எடுத்தே நெஞ்சினை பிளந்தான் கல்லும் கரையும் உள்ளம் உருகும் இரட்சகரை - கொல்கொதா மலை மேலே முள்முடி தலையில் ஓங்கி அறைந்தார் கால் கரங்களின் ஆணிகள் அடித்தார் இரத்தமும் ஆறாய் பாய்ந்தோடிடவே இரட்சகரை - கொல்கொதா மலை மேலே காற்றும் கடலும் அவர் சொல்ல அடங்கும் சாத்தானின் சேனை அவர் முன் முடங்கும் வல்லமை உள்ளவர் ஏன் மௌனமானார் நமக்காகவே - கொல்கொதா மலை மேலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Malai Maelae Naanoru Kaatsi Kantaen Kulai Natungkith Thutitthezhunthae Siluvaiyaik Kantaen Paaynthotuthae Rattham Aaraay Paarkka Mutiyumo - Andha Korak Kaatsiyai Kolkothaavil Naan Kantaen Korak Kaatsiyai Koora Mutiyumo Ennaal Andhak Kotumaiyai - Kolkothaa Malai Maelae Kannatthilae Atitthu Kaari Umizhnthaan Eettiyai Etutthae Nenjsinai Pilanthaan Kallum Karaiyum Ullam Urukum Iratsakarai - Kolkothaa Malai Maelae Mulmuti Thalaiyil Ongki Arainthaar Kaal Karanggalin Aanigal Atitthaar Ratthamum Aaraay Paaynthotidavae Iratsakarai - Kolkothaa Malai Maelae Kaarrum Katalum Avar Solla Adangkum Saatthaanin Saenai Avar Mun Mudangkum Vallamai Ullavar Aen Maunamaanaar Namakkaagavae - Kolkothaa Malai Maelae