பாடல் #223
அருள் மாரி எங்குமாக
🔤 Arul Maari Engkumaaga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அருள் மாரி எங்குமாக பெய்ய, அடியேனையும் கர்த்தரே, நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும், என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும், என்னையும் நீர் அணைத்துக் காருமேன். 3. இயேசுவே, நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும், என்னையும் சுத்தமாக்கியருளும். 4. தூய ஆவீ, கைவிடாமல் என்னை ஆட்கொண்டருளும் பாதை காட்டிக் கேடில்லாமல் என்றும் காத்துத் தேற்றிடும் என்னையும், என்னையும் என்றும் காத்துத் தேற்றிடும். 5. மாறா சுத்த தெய்வ அன்பும், மீட்பர் தூய ரத்தமும், தெய்வ ஆவி சக்திதானும் மாண்பாய்த் தோன்றச்செய்திடும் என்னிலும், என்னிலும் மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Arul Maari Engkumaaga Peyya, Atiyaenaiyum Karttharae, Neer Naesamaaga Santhitthaaseervathiyum Ennaiyum, Ennaiyum Santhitthaaseervathiyum. 2. En Pithaavae, Paaviyaenai Kaivitaamal Nokkumaen Thikkillaa Ivvaezhaiyaenai Neer Anaitthuk Kaarumaen Ennaiyum, Ennaiyum Neer Anaitthuk Kaarumaen. 3. Yesuvae, Neer Kaivitaamal Ennaich Saertthu Ratsiyum Ratthatthaalae Maasillaamal Sutthamaakkiyarulum Ennaiyum, Ennaiyum Sutthamaakkiyarulum. 4. Thooya Aavee, Kaivitaamal Ennai Aatkondarulum Paathai Kaattik Kaetillaamal Enrum Kaatthuth Thaerritum Ennaiyum, Ennaiyum Enrum Kaatthuth Thaerritum. 5. Maaraa Suttha Theyva Anpum, Meetpar Thooya Ratthamum, Theyva Aavi Sakthithaanum Maanpaayth Thondrachseythitum Ennilum, Ennilum Maanpaayth Thondrachseythitum.