பாடல் #2210
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்
🔤 Kaelunggal Tharappatum Thattunggal
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றாரு - இயேசு தஞ்சம் என்று தன்னிடத்தில் ஓடிவரும் மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தாரு பெத்தலைளின் ஊரினிலே சத்தரத்தின் தொழுவத்திலே இயேசு சாமி பிறந்து விட்டாரு சூசை மரி மகனாய் வளர்ந்து வந்தாரு ஆறு வயதினிலே ஆரம்ப பள்ளியிலே பாடம் படிக்கச் சென்றாரு பரிசுத்த ஆகமங்கள் அறுத்து ஆறினையும் ஐயமின்றி கற்றறிந்தாரு மன்னாதி மன்னவரு மனுக்குலத்தின் இரட்சகரு மானிடரை மீட்க வந்தாரு பன்னிரண்டு வயதிலே பஸ்கா பண்டிகைக்கு தேவாலயம் சென்றாரு - எருசலேம் தந்தையார் செய்து வந்த தச்சுத் தொழிலையே தனயனும் செய் வந்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்து வந்தாரு அறிஞர்கள் தலைவர்கள் வியந்திட ஆலயத்தில் போதனைகள் செய்து நின்றாரு முப்பதாம் வயதிலே யோர் தான் நதியிலே ஞானஸ்நானம் எடுத்தாரு - யோவானால் முழ்கிஸ்நானம் பெற்றாரு இவர் தானே என்னுடைய நேசகுமாரன் என்று பரலோகம் திறந்து சொன்னாரு நன்றி கெட்ட உலகுக்கு நன்மை செய்த இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான் - யூதாஸ் சத்தமின்றி பிடித்துக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் காசை முன்னாலே வைத்தவுடன் நண்பனையே காட்டிக் கொடுத்தான் யூதாஸ் நாண்டு கொண்டு செத்து மடிந்தான் சேனைகளின் தேவனை சிலுவையில் அறைந்ததால் சந்தோஷம் அடைந்தார்கள் சதிகாரர் சாத்தானின் தலையினை சிலுவையில் நசுக்கிட மரித்ததை மறந்தார்கள் - தேவ ரகசியத்தை அறியார்கள் மரணத்தை ஜெயித்த மன்னாதி மன்னவரு மூன்றாம் நாள் உயிர்த்தெழந்தார் - இயேசு பரலோகம் சென்றடைந்தார் ஆயத்தம் உள்ளவரை அகாயம் சேர்த்திட ஆண்டவர் வந்திடுவாரு மத்திய வானத்தில் வந்திடுவாரு பரலோக நாட்டிலே நமக்கொரு வீட்டினை ஆயத்தப்படுத்துகின்றாரு பரிசுத்த வான்களை தன்னோடு அழைத்துச் செல்ல இயேசு வேகம் வருவாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaelunggal Tharappatum Thattunggal Thirakkappatum Thaetunggal Kitaikkumenraaru - Yesu Thanjjam Enru Thannidatthil Otivarum Makkalukku Nanmaigalaich Seythu Vanthaaru Petthalailin Oorinilae Sattharatthin Thozhuvatthilae Yesu Saami Piranthu Vittaaru Soosai Mari Makanaay Valarnthu Vanthaaru Aaru Vayathinilae Aaramba Palliyilae Paadam Patikkach Senraaru Parisuttha Aagamanggal Arutthu Aarinaiyum Aiyaminri Kartrarinthaaru Mannaathi Mannavaru Manukkulatthin Iratsakaru Maanidarai Meetka Vanthaaru Pannirantu Vayathilae Paskaa Pantikaikku Thaevaalayam Senraaru - Erusalaem Thanthaiyaar Seythu Vandha Thachsuth Thozhilaiyae Thanayanum Sey Vanthaarae Thangga Uzhavarkal Uzhuthida Kalappaigal Seythu Kotutthu Vanthaaru Arinjarkal Thalaivarkal Viyanthida Aalayatthil Podhanaigal Seythu Ninraaru Muppathaam Vayathilae Yor Thaan Nathiyilae Njaanasnaanam Etutthaaru - Yovaanaal Muzhkisnaanam Perraaru Ivar Thaanae Ennutaiya Naesakumaaran Enru Paralogam Thiranthu Sonnaaru Nanri Ketta Ulakukku Nanmai Seytha Yesuvai Mutthamittuk Kaattik Kotutthaan - Yoothaas Satthaminri Pititthuk Kotutthaan Muppathu Vellik Kaasai Munnaalae Vaitthavudan Nanpanaiyae Kaattik Kotutthaan Yoothaas Naantu Kontu Setthu Matinthaan Saenaigalin Devanai Siluvaiyil Araindhathaal Santhosham Atainthaarkal Sathikaarar Saatthaanin Thalaiyinai Siluvaiyil Nasukkida Maritthathai Maranthaarkal - Thaeva Rakasiyatthai Ariyaarkal Maranatthai Jeyittha Mannaathi Mannavaru Moonraam Naal Uyirtthezhanthaar - Yesu Paralogam Sendratainthaar Aayattham Ullavarai Akaayam Saertthida Aandavar Vanthituvaaru Matthiya Vaanatthil Vanthituvaaru Paraloga Naattilae Namakkoru Veettinai Aayatthappatutthukinraaru Parisuttha Vaankalai Thannotu Azhaitthuch Sella Yesu Vaegam Varuvaaru