பாடல் #2203
கூர் ஆணி தேகம் பாய
🔤 Koor Aani Thaegam Paaya
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே, நானுங் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி! ஆ, திவ்விய உருக்கம்! நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Koor Aani Thaegam Paaya Maa Vaedhanaippattaar Pithaavae, Ivarkatku Mannippeeyum Enraar. 2. Tham Rattham Sinthinorai Nal Meetpar Ninthiyaar; Maa Theyva Naesatthotu Ivvaaru Jepitthaar. 3. Enakkae Avvurukkam Enakkae Achsebam; Avvidha Mannippaiyae Enakkum Arulum. 4. Neer Siluvaiyil Saaga Seythathen Aganthai; Kataavinaen, Yesuvae, Naanung Koor Aaniyai. 5. Um Saandhak Kantidhatthai Naan Nittham Igazhnthaen; Enakkum Mannippeeyum, Ennaamal Naan Seythaen. 6. Aa, Inba Naesa Aazhi! Aa, Thivviya Urukkam! Ninthippor Ariyaamal Sey Paavam Manniyum.