பாடல் #219
அருளே பொருளே ஆரணமே
🔤 Arulae Porulae Aaranamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.அருளே! பொருளே! ஆரணமே! அல்லும் பகலுந்துணை நீயே; இருள் சேர்ந்திடுமிவ் வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல், மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல், கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி, 2.சென்ற நாட்களனைத்தினிலும் சிறியேன் தனக்கு செய்துவந்த நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும், என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி, 3.பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே! வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா வான் பொருளே! பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக் கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்துதியுனக் கொருகோடி, 4.பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க, நத்தும் இரவு முழுதனைத்தும் நாதா, என்னைக்காத்தருளி, முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச்சேர்க்கக் கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொருகோடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.arulae! Porulae! Aaranamae! Allum Pakalunthunai Neeyae; Irul Saernthitumiv Vaelaiyilae Innalonrun Thodaraamal, Maruntu Manathu Pirazhaamal, Vanjjatthozhilir Sellaamal, Karunaagaranae! Enaikkaakkak Kazharun Thuthiyunak Korukoti, 2.sendra Naatkalanaitthinilum Siriyaen Thanakku Seythuvandha Nanraam Nanmaigalanaitthirkum Navilarkariya Thayaigalukkum, Enrumazhiyaa Varanggalukkum Aezhaiyatiyaen Migath Thaazhnthu Kanru Ninainthu Katharudhalpol Kazharunthuthiyunak Korukoti, 3.parronrillaap Paramporulae! Paramaanandha Sarkuruvae! Varraanjaana Samutthiramae! Vatuvonrillaa Vaan Porulae! Perror, Urrorulakanaitthum Piriyamudanae Sukitthirukkak Karrillaadha Migach Siriyaen Kazharunthuthiyunak Korukoti, 4.patthiyathanaalunaip Paatip Paninthaeyenrum Vaazhnthirukka, Natthum Iravu Muzhudhanaitthum Naathaa, Ennaikkaattharuli, Mutthiyennum Motsanilai Mutivilatiyaen Thannaichsaerkkak Katthiyalarip Paravasamaayk Kazharunthuthiyunak Korukoti