பாடல் #2186
கும்பிடுகிறேன் நான்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள் குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும் ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தவிது சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன் குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர் குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்