பாடல் #2181
குணம் இங்கித வடிவாய் உயர்
🔤 Kunam Ingkidha Vativaay Uyar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. 1.மன்றல் செய்து மனை புகு மண வாளனோ டவ னேரும் தன் றுணையான மங்கையும் இங்கே தழைக்க அருள் தாரும். - குணம் 2.ஆதி மானிடற் கான ஓர் துணை அன்றமைத்த நற் போதனே, தீகற் இணையாம் இவர்க் கருள் செய்குவீர், எங்கள் நாதனே. - குணம் 3.தொன்று கானாவில் மன்றல் ஓங்கிடத் தோன்றிய தயாபரனே, இன்று மன்றல் சிறந்திட அருள் ஈந்திடும், க்ருபா கரனே. - குணம் 4.பண்பதில் அவ லேசமும் குறை பாடில்லாத தெய்வீகனே, நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட நண்ணும், மா திரி யேகனே. - குணம் 5.உற்ற நல் உற வோரும் எங்கள் உரிமை ஆனவர் யாரும் பற்றதாய் உறு பத்தியோடும்மைப் பாட நல் மனம் தாரும். - குணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kunam Ingkidha Vativaay Uyar Kovae, Yaesu Thaevae Manam Inggathi Valamaay Ura Varuveer, Maesiyaavae. 1.mandral Seythu Manai Puku Mana Vaalano Tava Naerum Than Runaiyaana Mangkaiyum Ingkae Thazhaikka Arul Thaarum. - Kunam 2.aathi Maanidar Kaana Or Thunai Andramaittha Nar Podhanae, Theegar Inaiyaam Ivark Karul Seykuveer, Enggal Naadhanae. - Kunam 3.thonru Kaanaavil Mandral Ongkidath Thonriya Thayaabaranae, Inru Mandral Siranthida Arul Eenthitum, Krupaa Karanae. - Kunam 4.panpathil Ava Laesamum Kurai Paatillaadha Theyveeganae, Nanpathil Iru Paerum Vaazhnthida Nannum, Maa Thiri Yaeganae. - Kunam 5.urtra Nal Ura Vorum Enggal Urimai Aanavar Yaarum Partrathaay Uru Patthiyotummaip Paada Nal Manam Thaarum. - Kunam