பாடல் #217
அருமையுற நீ இறங்கி
🔤 Arumaiyura Nee Irangki
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உதவு நதியாக வந்த பெருமானே 1. அருமையுற நீ இறங்கி அடியேனுள மீது தங்க அணுவளவிலாது பங்கம் - அகன்றோடும் அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்து அகமுழுதுமே நிறைந்து – வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள் திவிய வரமாக வந்து – எனதாகும் தினமுமெழிலாயிலங்கிலை எனதகமுமே கனிந்து சிறுமை செயும் ‘நான்’ மறைந்து – பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும் மலர் முக சந்தோஷ பண்பும் - சுடரான மகிமையும் நின்னோடுவந்து எனதிதயமே நிரந்து. வளமை வரவே விளைந்து – நிலையாக 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து உனதடிமையாய்ப் பரிந்து – எனையாளாய்! உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து உதவு நதியாக வந்த – பெருமானே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Udhavu Nathiyaaga Vandha Perumaanae 1. Arumaiyura Nee Irangki Atiyaenula Meethu Thangga Anuvalavilaathu Panggam - Aganrotum Aruloli Anpae Yurainthu Athigavuyarvaay Valarnthu Agamuzhuthumae Nirainthu – Vazhinthotum. 2. Thiruvarasun Seerkunanggal Iniya Thiruvaasakanggal Thiviya Varamaaga Vanthu – Enathaakum Thinamumezhilaayilangkilai Enathakamumae Kaninthu Sirumai Seyum ‘naan’ Marainthu – Paranthoti. 3. Maruvu Kiristhaesun Anpum Amarumazhakaana Inpum Malar Muga Santhosha Panpum - Sudaraana Makimaiyum Ninnotuvanthu Enathidhayamae Niranthu. Valamai Varavae Vilainthu – Nilaiyaaga 4. Urimaiyudanae Uvanthu Manamathiyelaang Kavarnthu Unathatimaiyaayp Parinthu – Enaiyaalaay! Unathasunaiyaaych Suranthu Atiyarulamae Virinthu Udhavu Nathiyaaga Vandha – Perumaanae!