பாடல் #216
அருமை ரட்சகா
🔤 Arumai Ratsakaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருமை ரட்சகா, கூடிவந்தோம் - உம தன்பின் விருந்தருந்த வந்தோம். அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க. - அருமை 1.ஆராயும் எமதுள்ளங்களை, - பல வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் திருவருள் கூரும். - அருமை 2.ஜீவ அப்பமும் பானமும் நீர், - எங்கள் தேவையாவும் திருப்தி செய்வீர்; கோவே! மா பயபக்தியாய் விருந்து கொண்டாட இப்போ. - அருமை 3.உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்; - உமது ஒளி முகதரிசன முற்றோம்; சமாதானம், அன்பு, சந்தோஷமும் எமில் தங்கச் செய்திடும். - அருமை 4.கிருபை விருந்தின் இந்த ஐக்யம் - பூவில் கிடைத் தற்கரிய பெரும் பாக்யம்; அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும் குருவே வந்தனம்! - அருமை 5.எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்! - கொடும் ஈனச் சிலுவையில் மரித்தீர்; பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம், புண்ய நாதரே! - அருமை 6.பந்திக் கெசமான் நீர் யேசுவே! - எமைச் சொந்தமாய் வரவழைத்தீரே உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக் கூழியஞ் செய்ய. - அருமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arumai Ratsakaa, Kootivanthom - Uma Thanpin Virundharundha Vanthom. Arivuk Kettaadha Aacchariyamaana Anpai Ninaikka. - Arumai 1.aaraayum Emathullanggalai, - Pala Vaaraana Nokkam Ennanggalaich Seeraaych Sutthamanathaay Utkolla Neer Thiruvarul Koorum. - Arumai 2.jeeva Appamum Paanamum Neer, - Enggal Thaevaiyaavum Thirupthi Seyveer; Kovae! Maa Payapakthiyaay Virunthu Kontaada Ippo. - Arumai 3.umathanpin Pirasannam Perrom; - Umathu Oli Mugatharisana Murrom; Samaathaanam, Anpu, Santhoshamum Emil Thanggach Seythitum. - Arumai 4.kirupai Virunthin Indha Aikyam - Poovil Kitaith Tharkariya Perum Paakyam; Arum Piriyattho Tenggalai Naesikkum Kuruvae Vandhanam! - Arumai 5.enggatkaay Umai Oppuvittheer! - Kotum Eenach Siluvaiyil Marittheer; Pongkum Paeranpai Engkum Therivippom, Punya Naadharae! - Arumai 6.panthik Kesamaan Neer Yaesuvae! - Emaich Sondhamaay Varavazhaittheerae Undham Kirupai Vallamai Perrumak Koozhiyanj Seyya. - Arumai