பாடல் #2157
கிறிஸ்தவ இல்லறமே
🔤 Kiristhava Illaramae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக் கிருபை செய்வீர், பரனே! பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப் பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல - கிறிஸ்தவ 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும், திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும், சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும், சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் - கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல், உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல, நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி, நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் - கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம், அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த், துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத், தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து - கிறிஸ்தவ 4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே, மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று, கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும், கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் - கிறிஸ்தவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhava Illaramae - Siranthidak Kirupai Seyveer, Paranae! Parisuttha Mariyannai, Paalan Yaesu, Yosaeppup Panpaay Natatthivandha Inbakkutumbampola - Kiristhava 1.jebamennum Thoobamae Thinam Vaanam Aeravum, Thiruvaedha Vaakkiyam Sevigalil Kaetkavum, Suba Njaanakkeertthanai Thutthiyam Paadavum, Sudha Naesu Thalaimaiyil Thooya Veetaagavum - Kiristhava 2. Oozhiyam Puriyavum Oothiyam Virumpaamal, Uvandha Petthaaniyaa Oorin Kutumbampola, Naalum Yaesu Piraanai Nalvirunthaali Yaakki, Naatiyavar Paadhatthil Kootiyamarnthu Kaettuk - Kiristhava 3.anpotaatthuma Thaagam Ariya Parobakaaram, Arumaiyaaga Niraindha Ayalaark Kolivilakkaayth, Thunbanj Seykira Palathotthu Viyaathigalaith, Thooranthuratthum Vakai Sollich Saevaiyaich Seythu - Kiristhava 4. Malaiyathin Maelulla Maalikaiyaip Polavae, Martravarkalukku Mun Maathiriyaay Ninru, Kalaiutai Unavilum, Kalvi Muyarsiyilum, Karttharuk Kaertra Parisutthak Kutumbamaagak - Kiristhava