பாடல் #2147
கிருபை புரிந்தெனை ஆள்
🔤 Kirupai Purinthenai Aal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் - நிதம் 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை 5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை 6. அம்பரமீதுறை வானவர் போற்ற கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Purinthenai Aal - Nee Paranae! Kirupai Purinthenai Aal - Nidham 1. Thiru Arul Neetu Meynjnjaana Thiritthu, Varilnaranaakiya Maa Thuvin Vitthu! --- Kirupai 2. Pannina Paavamelaam Agalvitthu, Ninnayamaay Migavun Thayaivaitthu --- Kirupai 3. Thanthiravaankatiyin Siraimeettu, Enthai, Makizhnthundran Anpupaaraattu --- Kirupai 4. Theemai Urum Pala Aasaiyai Neekkich Saami! Ennai Umakkaalayam Aakki --- Kirupai 5. Tholvinaiyaal Varum Saabam Ozhitthu Nalvinaiyae Sey Thiraani Alitthu --- Kirupai 6. Ambarameethurai Vaanavar Portra Kempeeramaay Visuvaasigal Aettha --- Kirupai