பாடல் #2140
கிஞ்சிதமும் நெஞ்சே
🔤 Kinjsidhamum Nenjsae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், - நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும், தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க, செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் - கிஞ்சிதமும் 2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ, கண்டடைந்தார் பேறு? - நல்ல தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத் தொகுத்து வெவ்வேறு விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும், வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும், கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல காரியங்களையும் பார் இது மா ஜெயம் – கிஞ்சிதமும் 3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட உன் செயல் மா பேதம் - அதின் தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல், துணை அவர் பாதம் ஏற்றர வணைக்கவே பணிவாக இரந்து மன்றாடி அவர் மூலமாகவே, ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த ஆவி உதவியை மேவி, அடைந்து நீ - கிஞ்சிதமும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kinjsidhamum Nenjsae, Anjsitaathae - Nalla Kaedakatthaip Piti Nee - Visuvaasak Kaedakatthaip Piti Nee Vanjjanaiyaagavae Paey Ethirtthundranai Vannik Kanaithotuth Theykindra Vaelaiyil, Nenjsil Pataamal Thatukka Athu Nalla Nicchayamaana Parisai Arinthu Nee – Kinjsidhamum 1. Paavatthai Verukka, Aabatthaich Sakikka, Patthiyil Thelikkavum, - Nithya Jeevanaip Pitikka, Logatthai Jeyikka, Thiramai Alikkavum, Saavae Un Koor Engkae? Paathaalamae, Un Jeyam Engkae? Enru Nee Koovik Kalikkavum, Devan Uganthunaith Thaan Angkeegarikka, Seyyavumae Athu Thivya Nal Aayudham - Kinjsidhamum 2. Pantaiyar Andhap Parisaiyinaal Allo, Kandatainthaar Paeru? - Nalla Thondan Aapael Mudhalaana Vaitheegaraith Thokutthu Vevvaeru Vinturaikkil Perukum Thee Anaitthathum, Veeriya Singgatthin Vaayai Ataitthathum, Kantidhamaay Verri Kondathu Maambala Kaariyanggalaiyum Paar Ithu Maa Jeyam – Kinjsidhamum 3. Oortramudan Ipparisaip Pititthida Un Seyal Maa Paedham - Athin Thortramum Mutivum Aesubaran Seyal, Thunai Avar Paadham Aertrara Vanaikkavae Panivaaga Iranthu Manraati Avar Moolamaagavae, Aartral Sey Thaertraravaali Parisuttha Aavi Udhaviyai Maevi, Atainthu Nee - Kinjsidhamum