பாடல் #2131
காலை நேரம் இன்ப ஜெபதியானமே
🔤 Kaalai Naeram Inba Jebathiyaanamae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலை நேரம் இன்ப ஜெப தியானமே கருணை பொற்பாதம் காத்திருப்பேன்! அதிகாலையில் அறிவை உணர்த்தி அன்போடு இயேசு தினம் பேசுவார்! எஜமான் என் இயேசு முகம் தேடுவேன் என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே! எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும் என்னை அழைத்தார் அவர் சேவைக்கே! பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல் பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்! இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார் இந்த மெய் வாக்கு நிறைவேறுதே! சிலுவை சுமந்தே அனுதினமே சோராமல் என் பின் வா என்றாரே! அவரோடு பாடு சகித்தாளுவேனே ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே! பறந்து புறா போல் சிறகடித்தே பாடிச் சென்றே நான் இளைப்பாறுவேன்! பரலோக வாசல் பரம சீயோனே பூரித்து என்னை வரவேற்குமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalai Naeram Inba Jeba Thiyaanamae Karunai Porpaadham Kaatthiruppaen! Athikaalaiyil Arivai Unartthi Anpotu Yesu Thinam Paesuvaar! Ejamaan En Yesu Mugam Thaetuvaen En Kan Kartthaavin Karam Nokkumae! Enakku Otthaasai Avaraal Kitaikkum Ennai Azhaitthaar Avar Saevaikkae! Palar Theemai Ninthai Mozhigal Unmael Poyyaay Sonnaalum Kali Kooruvaay! Ithuvae Un Paakyam Ena Yesu Sonnaar Indha Mey Vaakku Niraivaeruthae! Siluvai Sumanthae Anuthinamae Soraamal En Pin Vaa Enraarae! Avarotu Paatu Sakitthaaluvaenae Aantaantu Kaalam Jeyamaagavae! Paranthu Puraa Pol Sirakatitthae Paatich Senrae Naan Ilaippaaruvaen! Paraloga Vaasal Parama Seeyonae Pooritthu Ennai Varavaerkumae!