பாடல் #212
அருணோதயம் ஜெபிக்கிறேன்
🔤 Arunodhayam Jepikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருணோதயம் ஜெபிக்கிறேன் அருள் பரனே கேளுமே ஆவி வரந்தாருமே என் தேவனே. 1. கருணையுடன் கடந்த ராவில் காப்பாற்றினீர் தெய்வமே கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் - என் தேவனே சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன். 2. இந்த நாளைக் காணச் செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே இதற்காயும்மை ஸ்தோத்திரிக்கிறேன் - என் தேவனே இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன். 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே ஆவிக்குள் அடங்கச் செய்யுமே - என் தேவனே பாவிக்கருள் பெய்யச் செய்யுமே. 4. செய்யும் வேலை யாவுக்கும் உம் மா கிருபை வேணுமே இல்லாவிடில் நான் வெறுமையே - என் தேவனே எல்லாம் உம்மால் கூடும் உண்மையே. 5. வருகைக் கேற்ற ஆயத்தமும் மறுப்பிறப்பின் ஆவியும் மன திரங்கித் தாருமேசையா - என் தேவனே தினமும் என்னைக் காரும் யேசையா. 6. அன்பு பலம் தெளிந்த புத்தி ஆவி வரம் தாருமே அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமே - என் தேவனே அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arunodhayam Jepikkiraen Arul Paranae Kaelumae Aavi Varanthaarumae En Devanae. 1. Karunaiyudan Katandha Raavil Kaappaarrineer Theyvamae Karangkuvitthu Sthotthirikkiraen - En Devanae Sirangkuninthu Sthotthirikkiraen. 2. Indha Naalaik Kaanach Seytheer Irakkamulla Theyvamae Idharkaayummai Sthotthirikkiraen - En Devanae Idhayatthaalum Sthotthirikkiraen. 3. Maamisamum Kannum Indha Maaykaiyil Vizhaamalae Aavikkul Adanggach Seyyumae - En Devanae Paavikkarul Peyyach Seyyumae. 4. Seyyum Vaelai Yaavukkum Um Maa Kirupai Vaenumae Illaavitil Naan Verumaiyae - En Devanae Ellaam Ummaal Kootum Unmaiyae. 5. Varukaik Kaertra Aayatthamum Maruppirappin Aaviyum Mana Thirangkith Thaarumaesaiyaa - En Devanae Thinamum Ennaik Kaarum Yaesaiyaa. 6. Anpu Palam Thelindha Putthi Aavi Varam Thaarumae Atiyaen Jebam Aerruk Kollumae - En Devanae Arumai Meetpar Moolam Kaetkiraen.