பாடல் #2115
காலத்தின் அருமையை
🔤 Kaalatthin Arumaiyai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே. ஞாலத்தின் பரனுனை நாட்டின் நோக்கத்தைச் சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் - கால 1.மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ? கதியாம் ரசஷண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? - கால 2.நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு நோக்கிப்பின் அழித்தாரன்றோ? தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த தவணையின் காலமிவ் வருட முடியலாமே. - கால 3.முந்தி எரேமியா கனனியாவுக் குரைத்த முடிவை நீ யறியாயோ! எந்தக் காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல் ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ! - கால 4.இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற ஏசுனை அழைத்தாரல்லோ; மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்தி லென்னசெய்வாய்? - கால
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalatthin Arumaiyai Arinthu Vaazhaavitil Kanneer Vituvaayae. Njaalatthin Paranunai Naattin Nokkatthaich Seelamaay Ninaitthavar Moolam Pizhaitthituvaay - Kaala 1.mathiyai Yizhanthutheeya Vazhiyilae Nee Natanthaal Varungkobam Arinthitaayo? Kathiyaam Rasashanya Vaazhvaik Kantu Nee Makizhnthida Kaalam Ithuvae Nalla Kaalam Endrariyaayo? - Kaala 2.novaavin Kaalatthil Noorrirubathu Aantu Nokkippin Azhitthaaranro? Thaavaadha Kirupaiyaal Thaangki Unakkalittha Thavanaiyin Kaalamiv Varuda Mutiyalaamae. - Kaala 3.munthi Eraemiyaa Kananiyaavuk Kuraittha Mutivai Nee Yariyaayo! Endhak Kaalamum Siranjseeviyen Rennitaamal Aertra Aayatthamaay Eppothum Irunthitaayo! - Kaala 4.igatthinil Oozhiyam Agatthiyam Niraivaera Aesunai Azhaitthaarallo; Makatthuva Vaelaiyai Maranthu Thoongkuvaayaanaal Pakarkaala Mutiyum Raakkaalatthi Lennaseyvaay? - Kaala