பாடல் #2086
கவலை வைக்காதே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. கவலைவைத்திந்த உலகை - நாடி அபலமான வரனந்தங் - கோடி - கவலை 1.பெற்ற பிதா நமக்கொன்று, அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு - செய்ய உனக்கென்ன குறையுண்டு? - கவலை 2.என்ன நான் புசிப்பேனின்று - நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலை கொண்டு - தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? - கவலை 3.காகங்களை நோக்கிப்பாரு - நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு - இரை தருகிறாரென்று கூறு. - கவலை 4.புல்லும் பூண்டும் காட்டில் வளரும் - பிழைப் பூட்டுவ ராரென்று கழறும், பொல்லாக் கவலையாற்றழலும் - மனம் பொறுமையில்லாமல் அலறும். - கவலை 5.உடையின் கவலையாலே - மனம் உடையுமே பல வேளை, முடியுமோ உந்தனாலே - அல்ல முற்றுமது பிதாவேலை. - கவலை 6.கானகலீலிப் பூப்போலே - கன ஞானி சாலமோன் தன் மேலே பூணவில்லையாகையாலே - பிதா புல்லுக்குடுத்து மாப்போலே. - கவலை 7.கவலைப்பட்டோர் முழம் கூட்டும் - நரன் காசினியிலுண்டோ? காட்டும் குவலயமெல்லாம் போற்றும் - இயேசு கோமான் திருமொழிகேட்டும். - கவலை